தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடையை சேதப்படுத்திய வழக்கில் திமுகவினர் விடுதலை

திருவாரூர்: கடந்த ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் அரசுக்குச் சொந்தமான கடையை சேதப்படுத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் திமுகவினர் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையடைந்த திமுகவினர்

By

Published : Jul 31, 2019, 10:01 PM IST

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தின்போது, திமுக விவசாயத் தொழிலாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் சங்கர், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அமுதா சந்திரசேகர், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் ரஜினி சின்னா உள்ளிட்ட 4 பேர் மீது அரசுக்குச் சொந்தமான ஆவின் பாலகத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறி திருவாரூர் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விடுதலையடைந்த திமுகவினர்

அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கலைமதி குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பின் மூலம் திமுக உறுப்பினர்கள் நால்வரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details