தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உட்பட 5 பேருக்கு விடுதலை - திருவாரூர் நீதிமன்றம் உத்தரவு! - Sterlite Shooting

திருவாரூர்: கடந்த வருடம் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உட்பட 5 பேருக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

DMK Case Judgement in Tiruvarur Court
DMK Case Judgement in Tiruvarur Court

By

Published : Nov 29, 2019, 8:16 AM IST

கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் பேச அனுமதி வழங்கவில்லை எனக் கூறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூரில் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அனுமதியின்றி போராடியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் உட்பட 5 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உட்பட 5 பேருக்கு விடுதலை : திருவாரூர் நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கோபால கண்ணன் வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி ஐந்து பேருக்கும் விடுதலை அளித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 14 ஆண்டுகளில் 30 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு!

ABOUT THE AUTHOR

...view details