மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், திமுக 13 சட்டமன்ற தொகுதிகளிலும், அதிமுக ஒன்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் இன்று சபாநாயகர் அறையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றனர்.
திருவாரூரில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்! - திமுக
திருவாரூர்: திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பூண்டி கலைவாணன், இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
இதற்கிடையே, திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக பூண்டி கலைவாணன் பதவியேற்றதை அடுத்து திருவாரூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.