தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி கட்சித் தொண்டர்கள் சிறப்பு பூஜை! - விஜயகாந்த் பிறந்தநாள்

திருவாரூர்: கோட்டூர் ஒன்றியத்தில் தேமுதிக தலைவர் பூரண குணமடைய வேண்டுமென கட்சித் தொண்டர்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.

தொண்டர்கள் பிரார்த்தனை
தொண்டர்கள் பிரார்த்தனை

By

Published : Aug 25, 2020, 10:20 PM IST

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த தின விழாவை கொண்டாடும் விதமாகவும் அவர் பூரண குணம்பெற வேண்டியும் கோட்டூரில் உள்ள அருள்மிகு குழுந்தாள் அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இந்த அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம், முகக்கவசங்கள், இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட பொருளாளர் பாலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் சண்முகராஜ் கலந்து கொண்டு கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details