திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பங்கேற்று பேசினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பரப்புரை அப்போது மேடையில் பேசிய அவர், “கரோனா தொற்று தற்போது மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பாதுகாப்போடு இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களின் பாதுகாப்பிற்க்காகவும் அணிய வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பரப்புரை கரோனா வைரஸ் கிருமி கண்ணுக்குத் தெரியாதது போல, வடக்கே இருந்து ஆர்எஸ்எஸ்-பாஜக, என்ற கொடிய நோய்களும் தமிழ்நாட்டிற்குள் நுழைய பார்க்கின்றது. மத வெறி, சாதி வெறி நோய், பெண்ணடிமை நோய், கல்வி உரிமை பறிப்பு, மாநில உரிமை பறிப்பு நோய் ஆகியவை தமிழ்நாட்டில் நுழைய பார்க்கின்றது.
தமிழ்நாட்டை அடகு வைத்த முதுகெலும்பில்லாத முதலமைச்சர் - கி. வீரமணி விமர்சனம் இந்தியாவிலேயே அரசியல் கதாநாயகன் என்ற பெயரை திமுகவின் தேர்தல் அறிக்கை பெற்றுள்ளது. திமுக அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதுகெலும்பில்லாத மனிதர், தவழ்ந்து கொண்டே சென்று முதலமைச்சர் ஆனவர். அவருக்கொல்லாம் தமிழ்நாடு உரிமைகள் பற்றி தெரியாத முதுகெலும்பில்லா முதலமைச்சர்” என விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க...வாக்கு மையங்களில் கேமரா பொருத்தும் பணி: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை