திருவாரூரில் நாடளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிகள் அகற்றப்பட்டு தீவிர வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.
திக கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட அதிமுக கொடி! - கொடிக்கம்பம்
திருவாரூர்: பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திராவிடர் கழக கொடிக் கம்பத்தில், அதிமுக கொடி ஏற்றபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் பெரியார் சிலை அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள திராவிடர் கழக கொடிக் கம்பத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள், அதிமுக கொடியை ஏற்றி சென்றுள்ளார். இன்று காலை திராவிடர் கழக கொடிக் கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றபட்டுள்ளதை கண்டு, பெரியார் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திராவிடர் கழகத்தினரும் கூட்டணி கட்சியுமான திமுகவினரும் இணைந்து அதிமுக கொடியை அகற்றினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.