மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. நவ. 26ஆம் தேதியன்று போராட்டம் தொடங்கியபோது, விவசாய போராட்டக் குழுக்களைக் கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட நகலை தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் எரித்தபோது விவசாயிகளின் மீதான காவல் துறையினரின் அடக்குமுறைகளைக் கண்டித்தும், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.
விவசாயிகள் மீதான காவல் துறையினரின் அடக்குமுறைகளைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பட்டம்! அந்த வகையில், திருவாரூர் ரயில் நிலையம் முன்பு தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க :'திரையரங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ