திருவாரூர்: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 2ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அதன் எதிரொலியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் இரண்டு நாள்கள் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சம்பா நெற்பயிர்கள் மூழ்கும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.