தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத பயிர் காப்பீட்டுத் தொகை: வேதனையில் விவசாயிகள்! - Thiruvarur District News

திருவாரூர்: மூன்று ஆண்டுகளாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பயிர் காப்பீட்டுத் தொகை
பயிர் காப்பீட்டுத் தொகை

By

Published : Aug 5, 2020, 8:28 AM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அன்னதானபுரம், காளியாகுடி, வாலூர் போன்ற ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ”எங்கள் பகுதிக்கு காவிரிநீர் எட்டு ஆண்டுகளாக வராததால் நாங்கள் போர்வெல் கொண்டு குறுவை, சம்பா, சாகுபடி செய்து வருகின்றோம். ஏக்கருக்கு 25 ஆயிரம் செலவு செய்து போர்வெல் கொண்டு குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையிலும், கடந்த மூன்று வருடங்காளக இன்சுரன்ஸ் பயிர் காப்பீட்டில் ஏக்கருக்கு ரூபாய் 650 வருடம் வருடம் கட்டி வருகின்றோம்.

வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்
ஆனால் இன்றுவரை எங்கள் பகுதிகளில் யாருக்கும் இன்சூரன்ஸ் பயிர் காப்பீடு தொகை வழங்கவில்லை. இது சம்பந்தமாக பல முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கூறியதற்கு, விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆனால் இன்று நாள் வரை அதற்கான நடவடிக்கைகளும், இன்சுரன்ஸ் பயிர் காப்பீடு தொகையும் வழங்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த வருடமாவது மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கினால் மட்டுமே, அடுத்து சம்பா சாகுபடி பணியில் ஈடுபட முடியும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details