ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழை, எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கிய மா.கம்யூனிஸ்ட் - Thiruvarur Muthupettai

திருவாரூர்: முத்துப்பேட்டையில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கினர்.

cpm party relief material providing
cpm party relief material providing
author img

By

Published : Jun 22, 2021, 7:28 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் ஏழை, எளிய குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும் உதவிகள் செய்துவருகின்றனர்.

அதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் அக்கட்சியின் சார்பாக வாழ்வாதாரங்களை இழந்து தவித்துவந்த நுாறு குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களான 5 கிலோ அரிசி, வெல்லம், டீ, காப்பி தூள் உள்பட காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details