தமிழ்நாடு, புதுச்சேரியில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 274-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மாநில அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.
ஹைட்ரோகார்பன் திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரணி - ஹைட்ரோ கார்பன் திட்டம்
திருவாரூர்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அந்தவகையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களிடத்தில் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இருசக்கர வாகன பேரணி நடக்கிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே புதூர் கிராமப் பகுதியில் தொடங்கிய வாகன பேரணியானது திருக்காரவாசல், கோமல், மாவூர், மாங்குடி, அடியக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த வாகன பேரணியில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.