திருவாரூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளாகப் போராடிய விவசாயிகளுக்கு டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும், என சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்ற அறிவிப்பு பல ஆண்டுகளாகப் போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
அந்தவகையில் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்கிறது. அதேபோல் மத்திய அரசு இதுவரை ஹைட்ரோகார்பன் எடுக்கக் கொடுத்திருக்கும் அனுமதிகள் ரத்து செய்யப்படுமா? என்பது குறித்த விளக்கத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசு அனுமதி கொடுத்தால் மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவதால் இச்சட்டம் இயற்றி எந்த பயனும் இல்லை” என்றார்.