திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு கிராம எல்லைப் பகுதியில் பேரூராட்சி குப்பைக்கிடங்கு பல ஆண்டுகளாக உள்ளது. சமீப காலமாக இங்கு அதிக அளவில் குப்பைக் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 17) முத்துப்பேட்டை பேரூராட்சி குப்பைக் கிடங்கு எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரூராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி பறை அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.