மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் ஒன்பது நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள் பல்வேறு கட்டங்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ளவேளாண் சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண மத்திய அரசு முன் வர வேண்டும் உள்ளிட்ட என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன.