தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு - CPI candidate list

திருவாரூர்: நாகப்பட்டினம், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

Nallakanu_CPI

By

Published : Mar 15, 2019, 9:59 PM IST

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்றுனர்.

இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாகை, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்றது.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நல்லகண்ணு,
"நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக செல்வராசு, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு கே.சுப்புராயன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுகவுக்கு எங்களின் முழு ஆதரவை அளிக்கிறோம். நிறுத்திவைக்கப்பட்டுள்ள மூன்று சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் நடத்தப்படவேண்டும்.

பாரதிய ஜனதா அறிவித்த வாக்குறுதிகளுக்கு, மாறாக அக்கட்சி செயல்பட்டு வருகிறது. எனவே அவர்களிடமிருந்து இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும். தமிழ் நாட்டை மீட்டெடுக்க வேண்டும்" என்றார்.


Nallakanu_CPI

ABOUT THE AUTHOR

...view details