தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 10, 2021, 1:27 PM IST

ETV Bharat / state

பருத்தியில் பூச்சி தாக்குதல் தீவிரம்: விவசாயிகள் தவிப்பு

திருவாரூர் : நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சப்பாத்தி, அசுவினி ஆகிய பூச்சிகளால் பருத்தியில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

insect attack in cotton
பருத்தியில் பூச்சி தாக்குதல் தீவிரம்

திருவாரூர்:நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பருத்தியில் வாடல் நோய், பூ மற்றும் மொட்டுகள் உதிர்தல், சப்பை கொட்டுதல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால், நன்னிலம் பகுதியில் சப்பாத்தி பூச்சி, அசுவினி பூச்சியின் தாக்குதல் அதிகளவில் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பேசிய விவசாயிகள், ’குடவாசல், வலங்கைமான், பேரளம், பூந்தோட்டம், ஆண்டிபந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தியில் அஸ்வினி பூச்சி நோய் தாக்குதல், சப்பாத்தி பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.

பாதிப்புக்குள்ளாகும் பருத்தி

இதனால் இலைகள் முழுவதும் சிவப்பு நிறமாகவும், தண்டுகளில் வெள்ளை நிற பூஞ்சை போல் ஒட்டிக் கொள்கிறது. பூச்சிகளின் தாக்குதலால் சரிவர பூக்காமலும், இலைகள் சுருண்டு காணப்படுகின்றன.

பருத்தியில் பூச்சி தாக்குதல் தீவிரம்

இதற்கு எந்த மருந்து தெளிக்க வேண்டும் என தெரியாமல் குழப்பத்தில் உள்ளோம். இதுவரை வேளாண்துறை அலுவலர்கள் வந்து பார்வையிட்டு உரிய மருந்தை பரிந்துரை செய்யாமல் இருந்து வருகின்றனர்’என வேதனை தெரிவித்தனர்.

பூச்சிகளின் கூடாரமான பருத்தி

உரிய நடவடிக்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேளாண்துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, விரைந்து உரிய மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டும் என ஒருமித்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பருத்தியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details