திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 17 ஆயிரம் ஹெக்டேர் ஏக்கர் பரப்பளவில் உழவர்கள் கோடை சாகுபடியான பருத்தி சாகுபடியில் ஈடுபடுகின்றனர். தற்போது பருத்தி எடுக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
சிறு, குறு உழவர்கள் தனியார் முதலாளிகளிடம் விற்பனை செய்கின்றனர். மீதமுள்ள உழவர்கள் அனைவரும் நன்னிலம் அருகே கோட்டூரில் செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை மையத்தில் விற்பனை செய்துவருகின்றனர்.
வியாபாரிகளுக்கே முக்கியத்துவம்
இந்நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இடைத்தரகர்கள், வியாபாரிகள் கொண்டுவரும் பருத்தி மூட்டைகளை உடனே கொள்முதல் செய்துவிட்டு, உழவர்களின் பருத்தி மூட்டைகளைக் காலம் தாழ்த்தி கொள்முதல் செய்துவருவதாக உழவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.