இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன.
அதேசமயம், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், காவல் துறையினர் போராடிவருகின்றனர்.
இந்த நிலையில், காவல் துறையினர்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகின்றன. அந்தவகையில், திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால் பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை நடைபெற்றது.