தமிழ்நாடு முழுவதிலும் கரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. சென்னை போன்ற பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களிருந்து வருபவர்களால் திருவாரூர் மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதனால் அங்கு இடப்பற்றாக்குறை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருந்தது.
இதனையடுத்து மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து மன்னார்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயக்குமார், ”இன்று முதல் கரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்படும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
இதில் தற்போது ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மன்னார்குடியில் புதியதாக கரோனா வார்டு தொடக்கம்! - மன்னார்குடியில் கரோனா வார்டு
திருவாரூர்: மன்னார்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவர் விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.
கரோனா வார்டு