தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக மக்களுக்காக காலபைரவருக்கு பாலபிஷேகம்! - Thiruvarur Kalabairavar

திருவாரூர்: நன்னிலம் பகுதியில் கோவிட்-19 வைரஸினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், உலக நன்மைக்காகவும் காலபைரவர் கோயிலில் மகா யாகம், பாலாபிஷேகம் நடைபெற்றது.

உலக மக்களுக்காக காலபைரவருக்கு பால் அபிஷேகம்!
உலக மக்களுக்காக காலபைரவருக்கு பால் அபிஷேகம்!

By

Published : Mar 18, 2020, 2:23 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே காக்கா கோட்டூர் ஸ்ரீ மகா காலபைரவர் கோயிலில் மூன்றாமாண்டு மகா உற்சவத்தினை முன்னிட்டு தேய்பிறை அஷ்டமியான நேற்று பைரவருக்குமகா யாகம், பாலபிஷேகம் நடைபெற்றது.

தற்பொழுது உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸினால் உலகம் முழுவதும் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ள நிலையில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காகவும் உலக நன்மை வேண்டியும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து ஸ்ரீ மகா காலபைரவருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

உலக மக்களுக்காக காலபைரவருக்கு பால் அபிஷேகம்

அதற்கு முன்னதாக நடைபெற்ற மகா யாகத்தின் இறுதியில் பூர்ணாஹுதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:பரவிவரும் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா!

ABOUT THE AUTHOR

...view details