உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்றிரவுவரை 969 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதில் திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் 13பேரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.