உலகம் முழுவதும் கரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் பாதிப்புகுள்ளானதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டில் 23 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. கரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. அந்த வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வெளி நாடுகளிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 605 பேர் அவரவர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் இதனிடையே, 144 தடை உத்தரவையும் மீறி மருத்துவக் குழுவினரின் அறிவுரையும் தவிர்த்து வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேர் வெளியில் நடமாடுவதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த ஐந்து பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனாவை எதிர்த்து நடைபெற்ற விழிப்புணர்வு திருமணம்!