கரோனா வைரஸ் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவை மார்ச் 31ஆம் தேதி வரை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரசுகன் என்பவர் பத்து நாள்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.