திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்; "திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 32 பேரில் மூன்று பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கட்டுபாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகள் அனைத்தும், ஒவ்வொன்றாக தடை நீக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் தூர்வாரும் பணி நடத்துவதற்கு ஏதுவாக நாளைய தினம் டெண்டர் விடப்படும். அதுபோல குடிமராமத்து பணிகள் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்படும்.