உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்தனர். இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா தொற்றை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.