திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனயைடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் டெல்லி சமய மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளார். அவருக்கு சமீபத்தில் கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது மனைவி கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்கான மருந்துகளை வாங்கச்சென்றுள்ளார். கரோனா தொற்றால் கணவர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மனைவிக்கும் கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு அங்கிருந்த மருத்துவர்கள் கரோனா பரிசோதனை செய்து கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை மூடல் மேலும் மருத்துவமனையில் இருந்த 5 மருத்துவர்கள் உட்பட 25 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்ரகொள்ளப்பட்டு மாதிரிகள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கூத்தாநல்லுர் மருத்துவமனையை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். கரோனா எதிரொலி காரணமாக அரசு மருத்துவமனையை மூடியதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.