திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மேலும் ஊரடங்கு அறிவித்த பின்னர் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் அவரவர் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 76 விழுக்காடு வழங்கப்பட்டுவிட்டது.