தமிழ்நாட்டில் கரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, சென்னை சென்றுவிட்டு நேற்று ஊருக்குத் திரும்பியுள்ளார்.
திருவாரூரில் 8 வயது சிறுமி உள்பட இருவருக்கு கரோனா! - தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம்
திருவாரூர்: சென்னை சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிய சிறுமி உள்பட இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், புலிவலம் பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர், வெளிநாட்டிலிருந்து நேற்று முன்தினம் ஊர் திரும்பிய நிலையில், அவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது. இதில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.