திருவாரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணி, அவருடைய தாய் மற்றும் சகோதரி, எட்டு மாத பெண் குழந்தை உள்ளிட்ட நான்கு பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு மாத கர்ப்பிணியின் தந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மூலம் அவரின் குடும்பத்திற்கு தொற்று பரவியுள்ளதாக சுகாதாரத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்போர் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கும், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் உள்பட 14 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.