தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் மேலும் இருவருக்கு கரோனா : ஐந்தாக அதிகரித்த எண்ணிக்கை - Corona patients count at Thiruvarur

திருவாரூர் : மூன்று பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

திருவாரூர்
திருவாரூர்

By

Published : May 24, 2020, 6:11 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஒருபுறம் கரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மற்றொருபுறம் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசு சார்பில், வெளி மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெளி மாநிலங்களில் பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது சொந்த மாவட்டத்திற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் திருவாரூர் மாவட்டம், நீலக்கரையில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தெற்கு தெருவைச் சேர்ந்த இருவருக்கு தற்போது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மூன்று பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் கரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கரோனாவால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க :திருவாரூர் - காரைக்கால் மின்சார ரயில் சேவை ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details