கரோனா வைரஸ் பரவும் அபாயத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள வேளூர் தண்டலைசேரி, ராமர் மடம் உள்ளிட்ட பகுதி முழுவதுமுள்ள பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
கரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம்.! - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள வேளூர் தண்டலைசேரி, ராமர் மடம்
திருவாரூர்: கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள வேளூர் ஊராட்சி பொது மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வீடுகள், கடைகள், வாகனங்களில் செல்பவர்களுக்கும் இயல்பாக காலை நேரங்களில் சாலைகளில் கூடுகின்ற தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது மக்களிடமும் கரோனா வைரஸ் ஏற்படும் அறிகுறிகளையும், அதை எப்படி தடுக்க வேண்டும் போன்ற முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.பாலு அப்பகுதி பொதுமக்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கலாராணி மற்றும் ஒன்றியக் குழு ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் அதுவே நமது பாதுகாப்பு என்று பல அறிவுரைகளை கூறினார்கள்.