திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு மீண்டும் இரண்டு முறை ரத்தப் பரிசோதனை செய்து அதில் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.