தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9,566 பேர் கைது - திருவாரூர் மாவட்டச் செய்திகள்

திருவாரூர்: ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒன்பதாயிரத்து 566 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதையும் மீறி வெளியில் சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் துரை எச்சரித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9,566 பேர் கைது
ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9,566 பேர் கைது

By

Published : Apr 23, 2020, 1:53 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே பொதுமக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9,566 பேர் கைது

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 28ஆவது நாள்களில் இதுவரை ஒன்பதாயிரத்து 206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்பதாயிரத்து 566 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் எட்டாயிரத்து 795 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் துரை, திருவாரூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒன்பதாயிரத்து 566 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதையும் மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க:காற்றில் பறந்த 144 - இயல்புநிலைக்குத் திரும்பியது போல் உள்ள திருவாரூர்

ABOUT THE AUTHOR

...view details