திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
துப்புரவு பணிகள் இயந்திரமாக்கப்படுவது பரிசீலனை -ஜெகதீஸ் ஹெரானி - sanitary workers
திருவாரூர்: துப்புரவு பணியின்போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க துப்புரவு பணிகள் இயந்திரமாக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹெரானி தெரிவித்துள்ளார்.
![துப்புரவு பணிகள் இயந்திரமாக்கப்படுவது பரிசீலனை -ஜெகதீஸ் ஹெரானி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4212173-thumbnail-3x2-sani.jpg)
இதில் கலந்துகொண்ட தேசிய துப்புரவு பணியாளர்கள் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹெரானி, ’துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 220 ஒப்பந்த பணியாளர்களும் 207 நிரந்தர துப்புரவு பணியாளர்களும் உள்ளனர். ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்வதற்கான பரிந்துரை முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எடுத்துரைக்க போவதாகவும், அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.