மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்து வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ராட்டை சுழற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்! - congress party
திருவாரூர்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராட்டை சுழற்றி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![ராட்டை சுழற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்! ராட்டை சுழற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:38:05:1604131685-tn-tvr-02-congress-party-protest-vis-script-tn10029-31102020124757-3110f-00773-1070.jpg)
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் துரைவேலன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ராட்டை, ஏர் கலப்பையை வைத்துக்கொண்டு வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வேளாண் திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது, இச்சட்டம் விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டம், இதனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தியும், மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராட்டை சுழற்றியும், ஏர் கலப்பை வைத்துக்கொண்டும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.