குண்டும் குழியுமாக மாறிய புதிய பேருந்து நிலையம்! - Thiruvarur new bus stand
திருவாரூர்: திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குண்டும் குழியுமாக மாறிய புதிய பேருந்து நிலையம் சாலையைச் சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பேருந்து நிலையம்
திருவாரூர் அருகே உள்ள விளமலில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அதற்கான சாலை வசதியும் செய்துகொடுக்கப்பட்டது.
இரவு நேரங்களில் பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் விழுந்துவிடும் அவலநிலை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நீடித்துவருவதால் நகராட்சி நிர்வாகத்தினர் சாலையைச் சீரமைக்காமல் அலட்சியம் காட்டிவருகின்றனர். இந்த அவலநிலை தொடர்ந்து நீடித்துவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் இருந்துவருகின்றனர். இதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில்கொண்டு திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட புதிய பேருந்து நிலையத்தின் சாலையில் உள்ள பள்ளங்களைச் சீரமைத்துக் கொடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நெடுந்தொலைவு மின்சார ரயில்