திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 1000க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம்வரை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர் காப்பீடு வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரணி - Communist protest to give insurance for farmers
திருவாரூர்: பயிர்க்காப்பீடு வழங்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 1000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Communist protest for need crop insurance
இந்த ஆர்ப்பாட்டத்தில், "நிவர், புரெவி புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கான்கிரீட் வீடுகள் அமைத்து தரவேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
மழை, கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.