தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர்: விளமல் அரசு உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் சாந்தா ஆய்வுசெய்தார்.

திருவாரூர்
திருவாரூர்

By

Published : Nov 21, 2020, 3:17 PM IST

திருவாரூர் அருகே உள்ள விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், தொடர்பாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி அன்று தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி, வாக்காளர் பட்டியல் திருவாரூர், மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலகங்களிலும், அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

18 வயது நிறைவடைந்து இதுவரை வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும், வரும் ஜனவரி 01ஆம் தேது 18 வயது நிறைவடைய உள்ளவர்களும் அதாவது 01.01.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கு படிவம் 7, வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வதற்கு படிவம்-8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு படிவம் 8, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளான திருவாரூரில் - 303, திருத்துறைப்பூண்டி - 274, நன்னிலம் -309, மன்னார்குடி- 282 என திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,168 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. இன்றும். (நவ. 21.), நாளையும் (நவ. 22), வரும் டிச. 12, 13 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

இந்தச் சிறப்பு முகாம் நடைபெறும் நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். வாக்காளர் பட்டியல்களை www.elections.tn.gov.inஎன்ற வலைவளத்திலும் காணலாம். மேலும் www.nvsp.in என்ற வலைதளத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பித்து வாக்காளர்கள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details