உலக குருதி கொடையாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு மக்களுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ரத்ததானம் செய்து அசத்திய மாவட்ட ஆட்சியர்! - thiruvarur
திருவாரூர்: உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததானம் செய்தார்.
ரத்ததானம் செய்து அசத்திய மாவட்ட ஆட்சியர்!
இதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் ஆகியோர் ரத்ததானம் செய்தனர்.
மக்களுக்கு முன்மாதிரியாக மாவட்ட ஆட்சியர் ரத்ததானம் வழங்கியது எல்லோராலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.