தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் ஆட்சிமொழி சட்ட வாரமானது ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பாணையை வெளியிட்டார். அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் ஆட்சிமொழி சட்டவார விழா நடைபெற்றுவருகிறது.
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்: மாணவிகள் பேரணி! - Tamil Rule Language Law Week awareness
திருவாரூர்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தொடங்கிவைத்தார்.
அதன் ஒரு பகுதியாக இன்று கல்லூரி மாணவிகள் பங்கேற்ற தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பழைய தொர்வண்டி நிலையத்தில் தொடங்கிய இப்பேரணியில், மாணவிகள் ஆட்சிமொழி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முக்கிய நகர்ப்புறம் வழியாக நகராட்சியின் புதிய தொடர்வண்டி நிலையம் வரைச் சென்றடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ராஜேந்திரன், திருவாரூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் அறிவு ஆகியோர் கலந்துகொண்டனர்.
TAGGED:
தமிழ் ஆட்சி மொழி சட்ட வார