தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஜாபுயல் பாதிப்பு: நிவாரணம் வழங்க தென்னை விவசாயிகள் கோரிக்கை! - Coconur Former

திருவாரூர்: கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தென்னை விவசாயிகள் மனு அளித்தனர்.

former

By

Published : Jul 22, 2019, 4:50 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு வீசிய கஜா புயலால், பொதுமக்கள் தங்களுக்குச் சொந்தமான வீடுகள்,கால்நடைகள்,தென்னை மரம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அப்போது அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கோரிக்கை மனு அளிக்க வந்த தென்னை விவசாயிகள்
இதேபோல் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை தோப்புகள் முழுவதும் கஜா புயலினால் முழுவதும் சேதமானது. இதற்கு அரசு சார்பில் எந்தவித நிவராணமும் வழங்கவில்லை. உரிய நிவாரணம் வழங்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலமுறை வேளாண்மை துறை இயக்குநரிடம் மனு கொடுத்தும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கஜா புயலுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை

இதனால் இன்று சுமார் 50-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் மனு அளித்தனர்.

மேலும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அடிப்படை ஆவணங்களான
ரேசன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாக எச்சரித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details