காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கடந்த மாதம் அறிவித்தார்.
அதோடு மட்டுமில்லாமல் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி, சட்ட வடிவமாக அரசிதழில் வெளியிட்டார். இதற்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் முதலமைச்சருக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகள் சார்பில் திருவாரூரில் நாளை பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்காக 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.