விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்து டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை சட்டமாக்கி அரசிதழில் வெளியிட்டுள்ளார். இதற்கு அனைத்து விவசாயிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக திருவாரூரில் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. அதற்கான மேடை அமைக்கும் பணிகளை காவிரி ரெங்கநாதன், பி.ஆர்.பாண்டியன், சேதுராமன், சத்ய நாராயணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தரெங்கநாதன் கூறியதாவது, ”மார்ச் 7ம் தேதி மாலை திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள முதலமைச்சருக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் பச்சைத் துண்டுடன் கலந்துகொள்வார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாய சங்கங்களின் சார்பில் சிறப்பு பட்டம் வழங்கப்பட உள்ளது.
மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்த ரெங்கநாதன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் டெல்டா மாவட்ட விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொள்ளவுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம் பரிசீலனையில் உள்ளது- முதலமைச்சர் பழனிசாமி