ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி கடை வீதியில் சிஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் அனிபா தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு சிஐடியுசி ஆர்ப்பாட்டம்! - CITU protest demanding justice for Hathras incident
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடியில் சிஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் உ.பி.யில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
tvr
ஆர்ப்பாட்டத்தின்போது, உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினர் எரித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக உடனடியாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன. இதில், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.
Last Updated : Oct 9, 2020, 8:27 PM IST