திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் அருகில் நேற்று (ஏப்ரல் 23) அதிகாலை சாலையோரத்தில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தனியாக நின்றுள்ளான். அப்போது அருகில் டீ கடையில் இருந்த சிலர் குழந்தை நீண்ட நேரமாகத் தனியாக நிற்பதை அறிந்து அவனை தூக்கி வந்து, அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். யாரும் குழந்தை குறித்து சரியான தகவல் அளிக்காததால் குழந்தையை மன்னார்குடி காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். காவல் துறையினர் மன்னார்குடி குழந்தைகள் அமைப்பு பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
பெற்றோரால் வீதியில் விடப்பட்ட குழந்தை - தாத்தாவிடம் ஒப்படைப்பு! - collector Anand
திருவாரூர்: மன்னார்குடியில் பெற்றோரால் அனாதையாக வீதியில் விடப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், மன்னார்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமார், தான் குழந்தையின் தாத்தா எனவும், குழந்தையின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும், அதன் காரணமாகவே வீதியில் விட்டுச் சென்று உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து உரிய விசாரணை அடிப்படையில் குழந்தை ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் முன்னிலையில் தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டான். மேலும், குழந்தையை வீதியில் விட்டுச் சென்ற பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.