தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தையொட்டி மாணவர்கள் பேரணி! - மாணவர்கள் பேரணி

திருவாரூர்: குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தையொட்டி மாணவ-மாணவியர் விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் பேரணி

By

Published : Jun 12, 2019, 7:39 AM IST

திருவாரூரில் குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவியர் விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டனர். இதில் குழந்தைத் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் நடந்துசென்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஆனந்த்

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கிவைத்தார். திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக பழைய ரயில் நிலையம் வரை சென்றடைந்தது.

நிகழ்ச்சியின் முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பை உறுதிமொழியாக மாணவ, மாணவியரோடு ஆசிரியர்களும் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பாக வாகனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் ஒட்டினார்.

விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டிய மாவட்ட ஆட்சியர்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களிடம் இது போன்ற நாட்களில் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினால் மட்டும் போதாது, மாணவர்களிடையே அது தொடர்பான செய்திகளை தெரிவிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details