திருவாரூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் முக்தியளிக்கும் தலமாகவும் உள்ளது. இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
30 அடி அகலமும் 30 அடி உயரமும் 220 டன் எடை கொண்ட இந்த ஆழித்தேர் தேரோட்டத்தின்போது நான்கு வீதிகளிலும் ஆடி அசைந்து வரும் காட்சியைப் பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கூடுவார்கள்.
கண்ணாடி கூண்டை பார்வையிட்ட அமைச்சர் காமராஜ் தேரோட்டம் தவிர்த்து மற்ற காலங்களில் தேரானது முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள், வெளியூர் பயணிகள் பார்க்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பில் பைபர் கண்ணாடி கொண்டு நான்கு பக்கமும் மூடியுள்ளனர். இதனை, உணவுத் துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் , உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: துலா உற்சவத்தில் களைகட்டிய தேர்த் திருவிழா