திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டையில் மத்திய திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சகத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தின விழாவும், தொழிற்கல்வி பயின்ற பயனாளிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றன.
இவ்விழாவில் மக்கள் கல்வி நிறுவனத் தலைவர் கலைவாணி தலைமை வகித்தார். திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் திருலோகச்சந்தர் திட்ட விளக்க உரையாற்றினார்.