காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் குறித்து விவாதம் நடத்திய 30 மாணவர்களுக்கு நோட்டீஸ்! - சட்டப்பிரிவு 370
திருவாரூர்: காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய பல்கலைக்கழகத்தில் விவாதம் நடத்திய 30 மாணவர்களிடம் விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 'ஜம்மு-காஷ்மீர் வரலாறு மற்றும் 370 சட்டப்பிரிவு ரத்தால் ஏற்படும் விளைவுகள்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கிடையே விவாதம் நடைபெற்றது. மேலும் மத்திய அரசின் இந்த அரசாணைக்கு எதிராக பல்கலைக்கழக வளாகம் முழுவதும் துண்டு பிரசுரங்களை மாணவர்கள் ஒட்டினர்.
இதற்கு பல்கலைக்கழகத்தின் ஒழுக்கநெறி கண்காணிப்பாளர் ராஜகோபால், விவாதம் நடத்திய 30 மாணவர்களிடம் விளக்கம் கேட்டு மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.