தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மத்திய பாதுகாப்பு படையினர் தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் நன்னிலம் கூடுதல் காவல் கண்காணிபாளர் கார்த்திக் தலைமையில் அணிவகுத்து சென்றனர்.